(1)எப்பொழுதும் உன் சொப்பனங்கள்!
முப்பொழுதும் உன் கற்பனைகள்!
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்!
பாடல்: தாலாட்டும் பூங்காற்று நானல்லவா!
படம்: கோபுர வாசலிலே
(2)சந்தியாக் கால மேகங்கள்
என் வானில்
ஊர்வலம் போகுதே!
பார்க்கையில் ஏனோ
நெஞ்சிலே உன்
நடையின் சாயலே தோன்றுதே!
நதிகளிலே நீராடும் சூரியனை
நான் கண்டேன்!
வியர்வைகளின் துளி வழியே
நீ வருவாய் என நின்றேன்!
பாடல்: ஒன்றா இரண்டா ஆசைகள்
படம்: காக்க காக்க
(3) பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து!
நெஞ்சுக்குள்ளே சாரக் காத்து!
பார்வையாலே நூறு பேச்சு;
வார்த்தை மட்டும் மெளனமாச்சு;
பாடல்: ஏதோ மோகம்
படம் : கோழி கூவுது.
(4) வீசிப்போன புயலில்
என் வேர்கள் சாயவில்லை;
ஒரு பட்டாம்பூச்சி மோத
அது பட்டென சாய்ந்ததடி!
எந்தன் காதல் சொல்ல
என் இதயம் கையில் வைத்தேன்
நீ தாண்டிப் போன போது
அது தரையில் விழுந்ததடி.
மண்ணிலே செம்மண்ணிலே
என் இதயம் துள்ளுதடி;
ஒவ்வொரு துடிப்பிலும்
உன் பேர் சொல்லுதடி!
மண்ணைச் சேரும் முன்னே
மழைக்கு லட்சியம் இல்லை!
உன்னைக் காணும் முன்னே
என் உலகம் தொடங்கவில்லை!
உன்னைக் கண்ட பின்னே
என் உலகம் விடிந்ததடி.
வானத்தில் ஏறியே
மின்னல் பிடிக்கிறவன்,
பூக்களைப் பறிக்கவும்
கைகள் நடுங்குகிறேன்.
காதலைப் பேசவும் இல்லை!
என் காதல் குறைவதும் இல்லை!
பாடல்: மெல்லினமே
படம் : SHAHJAHAN
(5) உனக்கே உயிரானேன்!
என்னாளும் எனை
நீ மறவாதே!
நீ இல்லாமல்
எது நிம்மதி!
நீ தான் என்றும்
என் நிம்மதி!
பாடல்: கண்ணே கலைமானே
படம் : மூன்றாம் பிறை
No comments:
Post a Comment