Wednesday, November 23, 2011

கனவு கலையவில்லை கண்களில்!
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் உன் வார்த்தையில்!
கண்ணுக்கு இமையாக இருக்கின்றாய்!
நெஞ்சுக்குள் இசையாகித் துடிக்கின்றாய்!
நாளைக்கு நான் காண வருவாயோ!
பாறைக்கு நீரூற்றிப் போவாயோ!
வழி மீது விழி வைக்கிறேன்!!!!!!!!!!!!!

ஒரு வெட்கம் வருதே வருதே!
சிறு அச்சம் தருதே தருதே!
மனம் இன்று அலைபாயுதே!
இது என்ன கனவா! நனவா!
இனி என்தன் உயிரும் உனதா!
போகச் சொல்லி கால்கள் சொல்ல:
நிற்கச் சொல்லி நெஞ்சம் கிள்ள:

மெளனம் பேசியதே!
குளிர் தென்றல் வீசியதே!
குளிரும் பனியும்
என்னைச் சுடுதே சுடுதே!
உடலும் உயிரும்
இனி தனியே!

விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்!
அலைகடலாய் இருந்த மனம்
துளித் துளியாய் சிதறியதே!
ஐம்புலனும் என் மனமும்
எனக்கெதிராய் செயல்படுதே!

சொல் என்னும் ஓர் நெஞ்சம்!
இனி நில் என்னும் ஓர் நெஞ்சம்!
பசி, நீர், தூக்கம் இல்லாமல்
இவை நான் காணும் மாற்றங்கள்!!!
மறைத்திடவா! உரைத்திடவா!
மறுப்பது போல் நடித்திடவா!

விழி காண முடியாத மாற்றம்
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்:
இதில் மீள வழியுள்ளதே!
அதை மனம் சற்றும் விரும்பாது!

No comments:

Post a Comment