Monday, September 26, 2011


தேவனின் கோயில்
மூடிய நேரம்
நான் என்ன
கேட்பேன் தேவனே?
ஒருவழிப் பாதை
என் பயணம்
மனதினில் ஏனோ
பல சலனம்,
பிரிந்தே வாழும்
நதிக்கரை போல
தனித்தே வாழும் நாயகி.
இணைவது எல்லாம்
பிரிவதற்காக.
இதயங்கள் எல்லாம்
மறப்பதற்காக.
மறந்தால் தானே
நிம்மதி.

நன்றி- சின்னக்குயில் சித்ரா

Sunday, September 25, 2011

நான் கடவுள்

சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
நன்றிந்தக் கணம்புதிதாய்ப் பிறந்து விட்டேன்;
நான் புதியன், நான் கடவுள், நலிவிலாதோன்.
நன்றி பாரதி… நானும் கடவுள்.

Wednesday, September 21, 2011


வலியே! என் உயிர் வலியே!
நீ உலவுகிறாய் என் விழி வழியே!
சகியே! என் இளம் சகியே!
உன் நினைவுகளால்
நீ துரத்துகிறாயே?
மதியே! என் முழுமதியே!
வெண்பகல் இரவாய்
நீ படுத்துகிறாயே?
நதியே! என் இளம்நதியே!
உன் அலைகளினால்
நீ உரசுகிறாயே?

யாரோ மனதிலே?
ஏனோ கனவிலே?
நீயா உயிரிலே?
தீயா தெரியவில்லையே?
காற்று வந்து?
மூங்கில் என்னைப்?
பாடச் சொல்கின்றதோ?
மூங்கிலுக்குள் வார்த்தையில்லை
ஊமை ஆகின்றதோ?

மனம் மனம் எங்கிலும் ஏதோ
கனம் கனம் ஆனதே
தினம் தினம் ஞாபகம் வந்து
ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில்
கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
நீயோ முழுமையாய்
நானோ வெறுமையாய்
நாமாய் இனி சேர்வோமா

மிகக் மிகக் கூர்மையாய்
என்னை ரசித்ததுன் கண்கள்தான்;
மிருதுவாய்ப் பேசியே
என்னுள் வசித்ததுன் வார்த்தைதான்;
கண்களைக் காணவே
இமைகளே மறுப்பதா?
வெண்ணீர் வெண்ணிலா
கண்ணீர் கண்ணிலா?
நீயும்
வெறும் கானலா……………………..?????????

CREDITS……..HARRIS, BOMBAY JAYASHRI N KRISH

Tuesday, September 20, 2011

Say Good Morning with Bharathi


பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால்,
புன்மை யிருட்கணம் போயின யாவும்;
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி…

Friday, September 16, 2011

வீழ்வேனென்று நினைத்தாயோ !

தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்ப மிக வுழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப் பருவமெய்தி
கொடுங் கூற்றுக் கிரையென பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!

Thursday, September 15, 2011


பொன் வானம்
பன்னீர் தூவுது
இந்நேரம்...................

Thanks to the Rain n the one n only Janaki Mme

Wednesday, September 14, 2011

16


அன்பில் தொடங்கி
அன்பில் முடிக்கிறேன்……

நன்றி- தாமரை
நன்றி- A.R.ரெஹ்மான்

Monday, September 12, 2011

15


அஸ்தமனம் எல்லாம்
நிரந்தரம் அல்ல!
மேற்கில் விதைத்தால்
கிழக்கில் முளைக்கும்…

பாடல்- நெஞ்சே நெஞ்சே
படம்- ரட்சகன்

Friday, September 9, 2011

Acme of DUET



(@) பூமாலையே
    தோள் சேரவா!

படம்- பகல் நிலவு
பாடகர்- ராஜா சார், சித்ரா சிஸ்

(@) நான் தேடும்
    செவ்வந்திப் பூவிது

படம்- தர்ம பத்தினி
பாடகர்- ராஜா சார், ஜானகி

(@) அந்த நிலாவத்தான்
    நான் கையில புடிச்சேன்

படம்- முதல் மரியாதை
பாடகர்- ராஜா சார், சித்ரா சிஸ்


(@) பூந்தளிராட

படம்- பன்னீர் புக்ஷ்பங்கள்
பாடகர்- SPB, ஜானகி.

(@) ஏதோ மோகம்

படம்- கோழி கூவுது
பாடகர்- ,,,,,,,,,,,,,,,,,,,,,, ஜானகி

(@) கீரவாணி
படம்- பாடும் பறவைகள்
பாடகர்- SPB, ஜானகி.

(@) அந்தி மழை பொழிகிறது
 படம்- ராஜபார்வை
 பாடகர்- SPB, ஜானகி.

Energy Summit


(@)அப்பப்பா தித்திக்கும்
   உன் முத்தம்
   பொன் முத்தம்

படம்- ஜப்பானில் கல்யாணராமன்
பாடகர்- one n only SPB Sir.

(@)மடை திறந்து
  தாவும் நதி அலை நான்!

படம்- நிழல்கள்
பாடகர்- SPB again.   

(@) இளமை இதோ இதோ
   இனிமை இதோ இதோ

படம்- சகலகலா வல்லவன்
பாடகர்- SPB again.

06.09.2011

என் பிறந்த நாளன்று, பாரதி எனக்கென பரிசளித்த கவிதைப் புதையல். என் வாழ்வின் மிகச் சிறந்த காலையாய், மிகச் சிறந்த பரிசாய் எனக்கே எனக்கென நானே எடுத்துக் கொள்ள, என்றோ படைத்துச் சென்ற பாரதிக்கு என் வணக்கங்கள். நன்றி. பாரதியார் கவிதைகள். பக்கம் 125.

பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரி லாதெனைச் செய்து விட்டாள்.
துன்ப மென்பதைக் கொய்து விட்டாள்.

மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்.
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்.
வான்க ணுள்ள வெளியைச் செய்தாள்.
வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள்.

யாதுமாகி நின்றாய்- காளி! எங்கும் நீநி றைந்தாய்.
இன்ப மாகி விட்டாய்- காளி! – என்னு ளேபு குந்தாய்?
துன்பம் நீக்கிவிட்டாய்- காளி! தொல்லை போக்கி விட்டாய்.

நன்றி மகாகவி!