Thursday, August 25, 2011

13


உன்னை நினைப்பதை
நிறுத்தி விட்டால்
உள்ளம் ஏனோ
துடிக்கவில்லை!
எண்ணம் யாவதும்
அழித்து விட்டேன்.
இன்னும் பூமுகம்
மறக்க வில்லை.

காதல் என்ற வீதீவழி
கையை வீசிப் போனபின்னும்
கால் கடுக்கக்
காத்திருக்கிறேன் எதனாலே!
பிப்ரவரி மாதத்துக்கு
நாள் ஒன்று கூடி வர
ஆண்டு நான்கு காத்திருக்கும்
அது போலே…

நெஞ்சாங்கூட்டில்
நீயே நிற்கிறாய்.
நெற்றிப் பொட்டில்
தீயை வைக்கிறாய்.
கட்டிப் போட்டு
காதல் செய்கிறாய்.
முதுகில் கட்டெரும்புபோல்
ஊர்கிறாய்.

பாடல்- நெஞ்சாங்கூட்டில்
படம்- டிக்ஷ்யூம்.

No comments:

Post a Comment