Monday, July 9, 2012

Etho Oru Paatu | Unnidathil Ennai Koduthaen [1998]




ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம்தாலாட்டும்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம்தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம்சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம்கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள்குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே
தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

No comments:

Post a Comment