Naan Cherapunji ooraicherndha penna penna!
என் கண்ணாடி பேசவில்லை
கண்ணா! கண்ணா!
நான் சிரபுஞ்சி ஊரைச்
சேர்ந்த பெண்ணா! பெண்ணா!
நம் வானமோ இரண்டானதே!
வின்மீன்களும் முள்ளானதே!
நான் பாரதி பாடிய காதலியாகின்றேன்!
பிரிவால் உயிரே இளைத்தாயா!
வழி சொல்ல வளையல்கள்
விதைத்தாயா!
ஒரு நாள் எனை நீ மறந்தாயா!
மரணத்தைப் பிரிவில் நீ
உணர்ந்தாயா!
எங்கும் எங்கும் உன்னைக்
கண்டேன்!
என்னைக் கிள்ளி உண்மை
கண்டேன்!
இரு விழி பார்க்கும்
ஒரு பொய் தானே!
நான் நிழற்படம் கிழித்தேனே!
நிலவா வானை பிரிந்து
வரும்!
பிரிந்தால் என் வானம்
எரிந்து விழும்!
எனையே மனதும் நினைக்காது!
காற்றையும் என் கைகள்
அணைக்காது!
உயிரே! உயிரே! வந்திடுவாயா!
உயிரைக் கூட்டிச் சென்றிடுவாயா!
என் விழி தூங்க உன் இமை
வேண்டும்!
வரும் கனவுகள் உயிர்
தீண்டும்.
என் கண்ணாடி பேசவில்லை
கண்ணா! கண்ணா!
நான் சிரபுஞ்சி ஊரைச்
சேர்ந்த பெண்ணா! பெண்ணா!
No comments:
Post a Comment