மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளி படைத்த பார்வை வேண்டும்
ஞான தீபம் ஏற்ற வேண்டும்..
இடை வரும் பலவித தடைகளை தகர்த்திங்கு வாழ்ந்து காட்ட வேண்டும்
இலக்கிய பெண்ணுக்கு இலக்கணம் நீயென யாரும் போற்றவேண்டும்
மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம்
மானம் காக்கும் மாந்தர் யாருக்கும் மாலை வாங்கி போடுவோம்
ஏசினாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ வேண்டும்
No comments:
Post a Comment