ஆஹா! எவ்வளவு அழகான ஒரு பாடல். இன்றைய காலையை துவங்க என்ன செய்வது என என் பாடல் தொகுப்புக்களை அலசி மேய்ந்து கொண்டிருந்தேன். கீரவானி தொடங்கி மாங்குயிலே பூங்குயிலே தொடர்ந்து அறைத் தோழியின் அஸ்க் அஸ்க் அலைபேசி அழைப்பு மணியில் கடந்த போதும், மனம் எதிலும் பதியவில்லை. இளையராஜா, ரஹ்மான், தேவா, யுவன், ஜோக்ஷ்வா SRIDHAR, கடந்து கடந்து, கைவிரல்கள் கடைசியில் ஒரு பாடலில் வந்து நின்றது. இசை பிறகு குரல் என்ற வழக்கமான பழக்கமான பாணியைப் பின்பற்றாமல், ஒரு பெண்குயிலின்(அவரை அப்படி விவரிப்பதுதான் சரி) தொடங்கியது பாடல். பாடலா அது? பாடல் ஆரம்பித்த பதினான்காவது வினாடியில் குழலும் வயலினும் தங்கள் ராஜாங்கத்தை ஆரம்பித்தன. அப்புறம் நான் என்ன செய்ய? ஒன்றே ஒன்று மட்டும் தான் செய்தேன். ஒவ்வொரு தரம் பாடல் முடியும் போதும், எத்தனை முறைதான், PLAY AGAIN என்று வந்து வந்து அழுத்திக் கொண்டிருப்பது. ஐந்து முறை பார்த்தேன். பிறகு REPEAT THE CURRENT SONG போட்டுவிட்டு வேலையை செய்ய ஆரம்பித்து விட்டேன். Innocence, Intimacy, Love, Pure Magic, Pure Magic all in one song. Thanks to Raja Sir!! My Morning is Bright, Tender and in Blossom just because of one Song. You made my Day!! அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்………………………………………………………………….கடவுளே! இந்த பாடலை அந்த இசை ஞானியின் மனதிலும் விரல்களிலும் குரலிலும் கொண்டு வந்த தருணங்களுக்காகவே நம்புகிறேன். நீ இருக்கிறாய்!!!! தமிழ் இனிது; குழல் இனிது; யாழ் இனிதா எனத் தெரியவில்லை! ஆனால் வயலின் இனிது, இளையராஜாவின் இசை இனிது. இசைவான இந்த இசை தந்த இறைவா! உனக்கு நன்றி!!!!

ReplyDelete