புஞ்சை உண்டு
நஞ்சை உண்டு
பொங்கி வரும்
கங்கை உண்டு
பஞ்சம் மட்டும்
இன்னும் இங்கு
மாறவில்லை!
எங்கள் பாரதத்தில்
சோற்றுச் சண்டை
தீரவில்லை!
வீதிக்கொரு கட்சி உண்டு!
சாதிக்கொரு சங்கம் உண்டு!
நிம்மதியாய் வாழ ஒரு
நாதி இல்லை!
இது நாடா
இல்லை
வெறும் காடா!?!
இதைக் கேட்க
யாரும் இல்லை
தோழா………!
No comments:
Post a Comment