Friday, September 9, 2011

06.09.2011

என் பிறந்த நாளன்று, பாரதி எனக்கென பரிசளித்த கவிதைப் புதையல். என் வாழ்வின் மிகச் சிறந்த காலையாய், மிகச் சிறந்த பரிசாய் எனக்கே எனக்கென நானே எடுத்துக் கொள்ள, என்றோ படைத்துச் சென்ற பாரதிக்கு என் வணக்கங்கள். நன்றி. பாரதியார் கவிதைகள். பக்கம் 125.

பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரி லாதெனைச் செய்து விட்டாள்.
துன்ப மென்பதைக் கொய்து விட்டாள்.

மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்.
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்.
வான்க ணுள்ள வெளியைச் செய்தாள்.
வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள்.

யாதுமாகி நின்றாய்- காளி! எங்கும் நீநி றைந்தாய்.
இன்ப மாகி விட்டாய்- காளி! – என்னு ளேபு குந்தாய்?
துன்பம் நீக்கிவிட்டாய்- காளி! தொல்லை போக்கி விட்டாய்.

நன்றி மகாகவி!

No comments:

Post a Comment