Monday, September 26, 2011


தேவனின் கோயில்
மூடிய நேரம்
நான் என்ன
கேட்பேன் தேவனே?
ஒருவழிப் பாதை
என் பயணம்
மனதினில் ஏனோ
பல சலனம்,
பிரிந்தே வாழும்
நதிக்கரை போல
தனித்தே வாழும் நாயகி.
இணைவது எல்லாம்
பிரிவதற்காக.
இதயங்கள் எல்லாம்
மறப்பதற்காக.
மறந்தால் தானே
நிம்மதி.

நன்றி- சின்னக்குயில் சித்ரா

Sunday, September 25, 2011

நான் கடவுள்

சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
நன்றிந்தக் கணம்புதிதாய்ப் பிறந்து விட்டேன்;
நான் புதியன், நான் கடவுள், நலிவிலாதோன்.
நன்றி பாரதி… நானும் கடவுள்.

Wednesday, September 21, 2011


வலியே! என் உயிர் வலியே!
நீ உலவுகிறாய் என் விழி வழியே!
சகியே! என் இளம் சகியே!
உன் நினைவுகளால்
நீ துரத்துகிறாயே?
மதியே! என் முழுமதியே!
வெண்பகல் இரவாய்
நீ படுத்துகிறாயே?
நதியே! என் இளம்நதியே!
உன் அலைகளினால்
நீ உரசுகிறாயே?

யாரோ மனதிலே?
ஏனோ கனவிலே?
நீயா உயிரிலே?
தீயா தெரியவில்லையே?
காற்று வந்து?
மூங்கில் என்னைப்?
பாடச் சொல்கின்றதோ?
மூங்கிலுக்குள் வார்த்தையில்லை
ஊமை ஆகின்றதோ?

மனம் மனம் எங்கிலும் ஏதோ
கனம் கனம் ஆனதே
தினம் தினம் ஞாபகம் வந்து
ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில்
கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
நீயோ முழுமையாய்
நானோ வெறுமையாய்
நாமாய் இனி சேர்வோமா

மிகக் மிகக் கூர்மையாய்
என்னை ரசித்ததுன் கண்கள்தான்;
மிருதுவாய்ப் பேசியே
என்னுள் வசித்ததுன் வார்த்தைதான்;
கண்களைக் காணவே
இமைகளே மறுப்பதா?
வெண்ணீர் வெண்ணிலா
கண்ணீர் கண்ணிலா?
நீயும்
வெறும் கானலா……………………..?????????

CREDITS……..HARRIS, BOMBAY JAYASHRI N KRISH

Tuesday, September 20, 2011

Say Good Morning with Bharathi


பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால்,
புன்மை யிருட்கணம் போயின யாவும்;
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி…

Friday, September 16, 2011

வீழ்வேனென்று நினைத்தாயோ !

தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்ப மிக வுழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப் பருவமெய்தி
கொடுங் கூற்றுக் கிரையென பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!

Thursday, September 15, 2011


பொன் வானம்
பன்னீர் தூவுது
இந்நேரம்...................

Thanks to the Rain n the one n only Janaki Mme

Wednesday, September 14, 2011

16


அன்பில் தொடங்கி
அன்பில் முடிக்கிறேன்……

நன்றி- தாமரை
நன்றி- A.R.ரெஹ்மான்