Friday, December 30, 2011


நானும் நீயும்
ஏனோ இன்னும்
வேறு வேறாய்?
தூரம் என்ற சொல்லை
தூக்கில் போட்டுக் கொல்ல
நீ வாராய்!
புரை ஏறும் போதெல்லாம்
தனியாக சிரிக்கின்றேன்
அது ஏனடா?

இனி நானும் நானில்லை
இயல்பாக ஏனில்லை
ஏனடா? ஏனடா?
முன் போல நானில்லை.
முகம் கூட எனதில்லை
அது ஏனடா?

உபயம்: ஏய் நீ ரொம்ப அழகா இருக்க?

நீ பெளர்ணமி
என்றும் என் நெஞ்சிலே!

வந்து போன தென்றலே
நெஞ்சை அள்ளிப் போனதே!

மனதிலே உள்ளூறும் நினைவுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே!!

Tuesday, December 27, 2011


ஒரு வானவில்
இரு முறை
வருவதில்லை.
அது வந்து போன
ஒரு சுவடும் இல்லை..

Tuesday, December 20, 2011


பூ வசந்தமே
நீ மறந்ததேன்..?

விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே!

Tuesday, December 13, 2011

இந்த இனிய இரவுக்காக


இந்த இனிய இரவுக்காக

நான் தேடும் செவ்வந்திப் பூவிது!
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது!

படம்: தர்ம பத்தினி

நான் கவிஞனும் இல்லை!
நல்ல ரசிகனும் இல்லை!

படம்: படித்தால் மட்டும் போதுமா!

நான் காற்று வாங்கப் போனேன்!
ஒரு கவிதை வாங்கி வந்தேன்!

படம்: கலங்கரை விளக்கம்

ஊரு சனம் தூங்கிருச்சே!
ஊதக் காத்தும் அடிச்சிருச்சே!
பாவி மனம் தூங்கலையே!
அதுவும் ஏனோ புரியலையே!!!

படம்: மெல்லத் திறந்தது கதவு

Friday, December 9, 2011


மறைத்திடும்
திரை தனை
விலக்கி வைப்பாயோ!
விளக்கி வைப்பாயோ!!!

Wednesday, December 7, 2011


ஒரு சொட்டு கடலும் நீ!
ஒரு பொட்டு வானம் நீ!
ஒரு புள்ளிப் புயலும் நீ!
பிரமித்தேன்!

முன் அந்திச் சாரல் நீ!
முன் ஜென்மத் தேடல் நீ!
நான் தூங்கும் நேரத்தில்
விழி ஓரத்தில் வரும்
கனவு நீ!

நன்றி: ஹாரிஸ் ஜெயராஜ்

Saturday, December 3, 2011

வேதம் நீ!
இனிய நாதம் நீ!
நிலவு நீ!
கதிரும் நீ!
அடிமை நான்
தினமும் ஓதும்
வேதம் நீ!

நன்றி: இளையராஜா

Friday, December 2, 2011


எனது விழிகளை மூடிக் கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில்
உன்னைச் சிறை எடுத்தேன்.

நன்றி: AR RAHMAN IN MR.ROMEO

எனது விழி வழிமேலே!
கனவு பல விழி மேலே!

நன்றி : இளையராஜா FOR சொல்லத் துடிக்குது மனசு.