வானம் எங்கும் உன் பிம்பம்!
ஆனால், கையில் சேரவில்லை!
காற்றில் எங்கும் உன் வாசம்!!
வெறும் வாசம் வாழ்க்கை இல்லை!
உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி….
எதைக் கொண்டும் கரைக்க முடியாத, கணத்த காதலின் வலியைச்
சுமக்கும் ஒரு பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்!
கண்ணில் ஒரு வலி இருந்தால், கனவுகள் வருவதில்லை! ஸ்வர்ணலதாவின்
தங்கக் குரலில், இதைவிடவும் வலிமையாய் காதலின் தவிப்பை எவ்விதம் சொல்ல முடியும்?
காற்றின் அலைவரிசை கேட்கின்றதா?
கேட்கும் பாட்டில்
ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா?
நெஞ்சு நனைகின்றதா?
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா?
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே!
உன் வாசல் சேர்த்தேன்!
கடக்கவே முடியாத ஒரு பாடல்!!!
கடக்கவே முடியாத காதலுடன்!!!
கணத்த இதயத்துடன்
அடுத்த பாடலுக்குள் நுழைகிறேன்!
பேரன்பே!
உந்தன் நினைவு
என் கண்ணைச் சுற்றும் கனவு!
இது உயிரைத் திருடும் உறவு!
…..
உன்னோடு நான் கண்ட பந்தம்
உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட பந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்!!!
CLASS VAIRAMUTHU SIR!!!
No comments:
Post a Comment