Sunday, December 13, 2015



வனக்கிளியே……..ஒரு மிக நேர்த்தியான இசையை அனுபவித்துக் கேட்டவாறு இந்த ஞாயிறு மதியவேளையைக் கடந்து கொண்டிருக்கிறேன். சற்று பிசகினாலும் சறுக்கிவிடக்கூடிய கதைச்சூழலுக்கான பாடல் இது. இன்றைய இ/வசையமைப்பாளர்களிடம் இந்த பாடல் சிக்கியிருந்தால் என்னவாகியிருக்கும் என்று நினைத்தாலே தலை கிறுகிறுக்கிறது. இந்தப் பாடலின் நாயகன் மற்றும் நாயகியின் இயல்பு தன்மையை, கதாபாத்திரத்தை, மனோநிலையை  இதை விடவும் அழகாக எந்த பாடகர்களாலும் கொண்டு வந்திருக்க இயலுமா எனத் தெரியவில்லை. கட்டமைத்து கற்றுத்தந்து சாத்தியமாக்கிய இசைஞானிக்கு நன்றிகள் சமர்ப்பனம்.
  நீரலையின் சலசலப்போடு, வயலினும், குழலும், கீபோர்டும், ஹார்மனி என்னும் கோரஸ் என்னும் குழு இசையும், அழகு; அழகு; அழகு. சேதி என்ன? என கேட்டு முடிக்கையிலேயே சகலத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்து விட்ட தன்னம்பிக்கையை, ஞானச்செறுக்கை, கலாகர்வத்தை ஜானகி என்ற இசையரசி நிறுவிவிடுகிறார். கிருக்ஷ்ணசந்திரன் என்ற அற்புத கலைஞனின் மென்மையான குரலைத் தூக்கிச் சாப்பிட்டு, அரியணையேறி அமர்ந்து பிரம்மாண்டமாக பயணிக்கும் ஜானகி என்ற இசை ராட்சசியை அணுஅணுவாக ரசிக்க ஒரு பிறவி போதும் என்று தோன்றவில்லை. இளையராஜா என்ற இசை ஜாம்பவான்,  பல அழகிய ஆண் குரல்களை அவ்வப்போது அரங்கேற்றிக் கொண்டிருந்த போதும், ஜானகி என்ற ஒற்றை பெண்ணரசியின் ஆளுமை அத்தனையையும் புறம் தள்ளி பேராட்சி நடத்தியது எனத்தான் தோன்றுகிறது.  காலம் கடந்து நிற்கும் படைப்பு! இதற்கு மேல் நான் என்ன சொல்வது? வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு!!!
மனமில்லாமல் கடந்து “ எனக்குத்தானே! எனக்குத் தானே!” என அடுத்த பொக்கிக்ஷத்துக்குள் நுழைகிறேன்!!!! மலேசியா வாசுதேவன் கொஞ்சுகிறார், நனைகிறார், கரைகிறார்…நம்மையும் நனைத்துக் கரைத்தெடுத்துச் செல்கிறார்!!!! இருதயத்தில் மழை தூவுது!!!! ராஜா!!! ராஜாதான்!!!

No comments:

Post a Comment