உனை தினம் எதிர்பார்த்தேன்
உனை தினம் எதிர்பார்த்தேன்
உயிரினில் உனைத்தான் தினம் கோர்த்தேன்
உயிரினில் உனைத்தான் தினம் கோர்த்தேன்
அழகா உனை தினம் எதிர்பார்த்தேன்
நீ வரும் வழி பார்த்து
நெற்றிக்கு பொட்டிட்டு
காதணி மூக்குத்தி
கை வளையல் பூட்டி
கூந்தலில் மலர் சூடி கொதித்து தவித்து
நினைந்து உருகி
உனை தினம் எதிர்பார்த்தேன்
நீர் அலை மேலாடும் நுரைப் பூவைப் போல
நித்தமும் நினைவாலே தடுமாறினேனே
ஆலிலை மேலாடும் ஆகாய வண்ணா
நானென்ன நீ தீண்ட ஆகாதா பெண்ணா
வா சடுதியிலே வாடும் இளமையிலே
வா சடுதியிலே வாடும் இளமையிலே
மிதிலை என்றால் வா ஸ்ரீ ராமனாக
கயிலை என்றால் வா சிவா ரூபமாக
தணிகை என்றல்
திருத்தணிகை என்றால்
வா கதிர் வேலன் ஆகா
நீ வரும் பாதை பூவிதழ் தூவி
விழி இமைக்காமல் தவம் இருந்தேன்
உன் இரு விழி பார்வை ஒரு முறை காண
கொதித்து தவித்து நினைந்து உருகி
உனை தினம் எதிர்பார்த்தேன்
ராமனின் திருப்பாதம் தொடவேண்டித் தானே
நானொரு கல் போல தெருவோரம் வாழ்ந்தேன்
ஆயுளில் ஒரு பாதி தினம் உன்னைத் தேடி
ஆயிரம் குடம் நீரை அபிஷேகம் செய்தேன்
நீ சிறகு என்றால் நானும் இறகுகளாய்
நீ மனம் திறந்தால் நானும் நினைவுகளாய்
ஏற்று கொண்டேன் நான் சரி பாதி உன்னை
ஏற்றி வைப்பாய் நீ தீபம், நான் எண்ணெய்
எழுதி வைத்தேன் எழுதி வைத்தேன்
நான் உனக்காக என்னை
கண்ணனின் லீலை பாட்டிகள் சொன்ன
கதைகளில் மட்டும் கேட்டிருந்தேன்
மன்னன் உன் லீலை நேரினில் காண
கொதித்து தவித்து நினைந்து உருகி
உனை தினம் எதிர்பார்த்தேன்
உனை தினம் எதிர்பார்த்தேன்
உயிரினில் உனைத்தான் தினம் கோர்த்தேன்
உயிரினில் உனைத்தான் தினம் கோர்த்தேன்
உனை தினம் எதிர்பார்த்தேன்
எதிர்பார்த்தேன் எதிர்பார்த்தேன்
மோகமுள்ளின் " சொல்லாயோ வாய் திறந்து"ம், கோடை மழையின் " காற்றோடு குழலின் நாதமே"வும் இந்தப் பாடலுக்கு அடித்தளம் இட்டிருக்க வேண்டும்! எனினும் நல்ல நயமான பாடலே!
ReplyDeleteWow. எவ்வளவு நுணுக்கம்
Delete